Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் அமைச்சர் சல்மான் குர்ஷித் கொலை மிரட்டல்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டத்துறை அமைச்சரான சல்மான் குர்ஷித் சமூக ஆர்வலரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.


சல்மான் குர்ஷித்தின் மனைவி நடத்திவரும் அறக்கட்டளையில் நடந்துள்ள முறைகேட்டை அரவிந்த் கெஜ்ரிவால் ஆதாரத்தோடு வெளியிட்டார்.மேலும் வருகிற 1-ம் தேதி முதல் சல்மான் குர்ஷித்தின் தொகுதிக்கு சென்று போராட்டம் நடத்த இருப்பதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து மோதல் ஏற்ப்பட்டது.

இதனையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த குர்ஷித் கெஜ்ரிவால் என் தொகுதிக்கு வந்து திரும்பி போய்விடுவாரா என்றும் இன்று வரை பேனாவை வைத்து எழுதிய கைக்கு இரத்தத்தாலும் எழுதத் தெரியும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.இது பெரும் பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

மேலும் குர்ஷித் பத்திரிக்கையாளர்களிடமும் முறைப்படி நடக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post