Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்திற்கு காவிரி நீரை விட பிரதமருக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி. கே. வாசன், பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

பிரதமர் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், அநீதியானது என்றும் ஜி.கே. வாசன் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

காவிரி நதி நீர் ஆணைய தலைவர் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் செப்டம்பர் 19 ல் கூடிய காவரி நதிநீர் ஆணைய கூட்டத்தில், காவிரியில் இருந்து செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15 வரை விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீர் வழங்க வேண்டும் என்று மன்மோகன் சிங் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் கர்நாடகம் இதனை ஏற்க மறுத்தது. இதனால் தமிழக அரசு கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து செப்டம்பர் 28 ஆம் தேதி காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவரது உத்தரவை அமல்படுத்த கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து காவரி நீரை திறந்துவிட்ட கர்நாடக அரசு 7 நாட்கள் முன்னதாகவே தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்திவிட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post