Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியாவிடம் இருந்து அழுத்தங்கள் ஏதும் வரவில்லை

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியாவிடமிருந்து அழுத்தங்கள் ஏதும் வரவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய அரசின் அழைப்பின் பேரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்லவுள்ள நிலையில், தமது பயணம் குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

"13வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றத் தயார் என்று 
இலங்கை அரசாங்கம் கூறவில்லை.

அதை அரசியல் தீர்வாக அவர்கள் முன்னிறுத்தவும் இல்லை.

மாகாணசபைகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச அதிகாரங்களைப் பறிக்கவே திவி நெகும சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழரின் அரசியல் பிரச்சினைக்கு 13வது சட்டத்திருத்தம் தீர்வாக அமையாது.

அரசியல் தீர்வு தொடர்பாக
இலங்கை அதிபர் இந்தியாவுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதும் அவை நிறைவேற்றப்படவில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியாவிடமிருந்து அழுத்தங்கள் ஏதும் வரவில்லை” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
[vuukle-powerbar-top]

Recent Post