Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜெனிவா மீளாய்வில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு ராஜபக்சவுக்கு மன்மாகன்சிங்கின் வாக்குறுதி?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பிரதிநிதிகளைக் கொண்ட இரா. சம்பந்தன் தலைமையிலான குழு வரும் 10ம் நாள் புதுடெல்லி செல்லவுள்ளது.

இந்தக் குழுவினர் இரண்டு நாட்கள் புதுடெல்லியில் தங்கியிருந்து, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“பெரும் நம்பிக்கையோடு நாம் புதுடெல்லி செல்கிறோம். இலங்கையில் தமிழர்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர்” என்று இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்காலநாதன் தெரிவித்துள்ளார். ராஜபக்சவின் இந்திய பயணத்தின் பின்னர், இந்தியாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன்காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உடனடியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை வரும் நவம்பர் முதலாம் நாள் இலங்கையின் மனிதஉரிமைகள் நிலை குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வின் போது இலங்கைக்கு  இந்தியா ஆதரவாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை மன்மோகன்சிங்கிடம் இருந்து மகிந்த ராஜபக்ச பெற்றுள்ளதாகவும் இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post