Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தியது கர்நாடக அரசு - அதிர்ச்சியில் தமிழகம்

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடக அரசு நிறுத்தியதாக கிருஷ்ணராஜ சாகர் அணையின் பொறியாளர் விஜயக்குமார் தெரிவித்துள்ளார். 

நேற்று இரவு முதல் திடீரென காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதை கர்நாடக அரசு நிறுத்தியுள்ளது.தமிழ்நாட்டிற்கு காவிரியில் இதுவரை 3 டி.எம்.சி தண்ணீர் வந்து கொண்டிருந்ததாகவும் இது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தற்போது அணையில் 20 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது.கர்நாடக அரசின் உத்தரவையடுத்தே தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய பிரதமரிடம் கர்நாடக அரசு இன்று மனுதாக்கல் செய்ய உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post