Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வங்கக்கடல் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு ~ சென்னையில் கன மழை

தமிழகம் அருகே தென்கிழக்கு வங்கக்கடல் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் பல பகுதிகளில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் எங்கும் கன மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தேனி, கோவை உள்ளிட்ட பல இடங்களில் மழை பதிவாகி இருக்கிறது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலானதும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரைக்கும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மற்றைய இடங்களில் பலத்த மழையும் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post