Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி நிலவரம் குறித்து ஆய்வு செய்ய, மத்திய குழு இன்று சென்னை வந்தது

காவிரி நிலவரம் குறித்து ஆய்வு செய்ய, மத்திய குழு இன்று சென்னை வந்தது. அடுத்த வாரம் நடக்கவுள்ள காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்துக்கு முன்பாக, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுடன் இக்குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. 

மத்திய நீர்வளத் துறை செயலாளர் டி.வி.சிங் தலைமையிலான குழுவினர் இன்று தமிழகத்திலும், நாளை கர்நாடகாவிலும் ஆய்வு செய்கின்றனர். அணைகளின் நீர்மட்டம், பயிர்களின் நிலை, நீர் வெளியேற்றம் ஆகியவை குறித்து இந்த குழு நேரில் ஆய்வு செய்கின்றனர். 

இந்த குழுவினர், தமிழக அரசின் தலைமைச் செயலாளருடன் இன்று காலை ஆலோசனை நடத்த உள்ளனர். அக்டோபர் 15ம் தேதிக்கு பின் நடக்கவுள்ள காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தின் போது, தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post