Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜெ, ராமதாஸ் மீது தொடர்ந்து அவதூறு வழக்கு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கடந்த மாதம் (செப்டம்பர் 1ம் தேதி) ஒரு வாரப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகள் சென்று எளிதில் சந்திக்க முடியாத அளவிற்கு அதிக நாட்கள் கொடநாட்டில் தங்கிவிடுவதாகவும், தமிழகத்தில் ஊழல் பெருகி விட்டதாகவும் கூறியிருந்தார்.

இதனையடுத்து ராமதாஸ் மீதும், அவர் அளித்த பேட்டியை வெளியிட்ட அந்த வாரப் பத்திரிகை நிர்வாகிகள் மீதும் தமிழக முதல்வர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் படி ராமதாஸ் மற்றும் அவர் பேட்டியை வெளியிட்ட வாரப் பத்திரிகை நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி இன்று, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராமதாஸ் மற்றும் சம்பந்தப்பட்ட பத்திரிகை நிர்வாகிகள் ஆஜராகினர். வழக்கு விசாரணையை டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ் : தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போல், இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தின் முதல்வரும் 45 நாட்களுக்கு மேல் ஒரு கோடை வாச ஸ்தலத்தில் தங்கியது கிடையாது என்றும் தமிழகத்தில் ஊழல் பெருகி விட்டது என்றும் கூறினார்.

இருப்பினும் ஊழல் பெருகிவிட்டதை தன்னால் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியாது என்றார். மேலும் ஜெயலலிதா தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை சந்திக்க தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post