Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியா குறித்து இலங்கை இராணுவம் பெருமிதம்

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் எதிர்ப்பு இருந்தாலும், இலங்கைப் படையினருக்கு இந்தியா மிகச்சிறந்த பயிற்சிகளை வழங்கி வருவதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். 

இலங்கை படையினருக்கு இந்தியா மிகச்சிறந்த பயிற்சிகளை வழங்குகிறது. 

நவீன பயிற்சி முறைகளுடன் கூடிய இந்தப் பயிற்சி, அவர்களின் நிபுணத்துவத்தை உயர்ந்த தரத்தில் பேணுவதற்கு உதவுகிறது. 

இந்த ஆண்டுமுதல், இந்தியாவில் பயிற்சி பெறும் இலங்கை படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முதல்வர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், நாம் அங்கு தொடர்ந்து பயிற்சிக்குச் செல்வோம். 

இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கும், இந்த ஒத்துழைப்பு 50 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post