Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

எனது தொண்டு நிறுவனத்தில் முறைகேடா ~~ சல்மான் குர்ஷித்

மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்காக ஏராளமான சேவைகள் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 

தனது தொண்டு நிறுவனத்தில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இங்கிலந்து தலைநகர் லண்டன் சென்ற அவர் அங்கிருந்தவாறு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார். 

தனது தொண்டு நிறுவனம் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு ஊக்குவித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

அதுதொடர்பான புகைப்பட ஆதாரங்களை வெளியிட இருப்பதாக அவர் தெரிவித்தார். அரசியலில் பிரபலமாகவே தனக்கு எதிரான போராட்டத்தை அர்விந்த் கெஜ்ரிவால் கையில் எடுத்திருப்பதாக கூறிய அவர், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பொதுவிவாதம் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார். 

மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்காக சல்மான் குர்ஷித்தும் அவரது மனைவியும் இணைந்து நடத்தி வரும் தொண்டு நிறுவனம், பொய்யான கணக்குகளைக் காட்டி பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்தது. இந்தியா டுடே பத்திரிகை ஆசிரியர் அருண் பூரி இந்த புகாரினை எழுப்பினார். 

இதற்கான ஆதாரங்கள் குறித்தும் அருண் பூரி தெரிவித்திருந்தார். இதனையடுத்து, சல்மான் குர்ஷித்தை பதவி விலக வலியுறுத்தி சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார். 

மேலும், சல்மான் குர்ஷித்தையும் அவரது மனைவி லூயிஸ் குர்ஷித்தையும் கைது செய்ய வேண்டும் என்றும் அர்விந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார்.
[vuukle-powerbar-top]

Recent Post