Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கெஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்குகிறார்

ஊழலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் அர்விந்த் கெஜ்ரிவால், இன்று முறைப்படி அரசியல் கட்சியை தொடங்குகிறார். புதிய கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகள் தொடர்பான அறிவிப்புகளை டெல்லியில் அவர் வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாகவும் இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஆசி பெறுவதற்காக அன்னா ஹசாரேவை, கெஜ்ரிவால் நேற்று சந்தித்துப் பேசியதாக, கெஜ்ரிவால் குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். 

சமூக சேவகர் அன்னா ஹசரே தலைமையிலான குழுவில் அங்கம் வகித்த அர்விந்த் கெஜ்ரிவால், அவருடன் இணைந்து பல உண்ணாவிரதப் போராட்டங்களை பங்கேற்று நடத்தினார். ஆனால், அறவழிப் போராட்டங்களை மத்திய அரசு அலட்சியப்படுத்துவதால், அரசியல் கட்சி துவங்கி, அதன் மூலம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றூ கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடியாக அறிவித்தார். 

இதற்கு அன்னா ஹசாரே கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். கட்சியின் கூட்டத்திற்கோ, பிரச்சாரத்திற்கோ தனது பெயர் அல்லது புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் கெஜ்ரிவாலுக்கு அவர் தடை விதித்தார். 

இந்த நிலையில்தான், ஹசாரேவை, கெஜ்ரிவால் நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ஹசாரேவுக்கும் தனக்கும் நல்ல உறவு இருப்பதாகவும், ஊடகங்கள்தான், தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post