Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு, காரைக்குடி ஆசிரியர் மீது குற்றவியல் நடவடிக்கை



மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு, காரைக்குடி ஆசிரியர் மீது குற்றவியல் நடவடிக்கை. 

சிவகங்கை அக்18-சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் தஞ்சை அருனாசலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒவிய ஆசிரியர் சுகுமாறன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்து வந்தது தொடர்பாக  அவர் மீது நடவடிகை எடுக்க சென்னையில் நடந்த விசாரணையில் தேசிய மனித உரிமை ஆணையம் உத்திரவிட்டதை தொடர்ந்து பணியிலிருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யபப்பட்டார்.வருகிற 15 தினங்களுக்குள் குற்றவியல் நடவடிககை எடுக்கப்படும் என காவல்துறை உறுதி கொடுத்திருக்கிறார்கள்.

இப்பள்ளி மாணவிகள் ஒவிய ஆசிரியரின்  பாலியல் தொந்தரவு தொடர்பாக  தமிழக முதல்வர்க்கு மனு அனுப்பினார்கள்.தமிழக முதல்வர் உத்திரவிட்டு மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் விசாரணை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டு நன்னடத்தைகுழு,குழந்தை நலக்குழு,தேவகோட்டை கல்வி அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.இந்த விசாரணைக்கு பின்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.ஊழல் விசாரணை அறிக்கைகள் கிடப்பில் கிடந்ததுபோன்று பாலியல் குற்றச்சாட்டும் கிடப்பில் போடப்பட்டது.கல்வித்துறை கண்துடைப்பாக அவர் விருமபிய ஊருக்கு மாறுதல் செய்தார்கள்.

இது தொடர்பாக மக்கள் கண்காணிப்பக கல்வி உரிமை ஒருங்கிணைப்பாளர்கள் சொக்கு, ஆனந்தகுமார் ஆகியோர் விசாரணை அறிக்கையை தகவல் பெறும் உரிமைச்சட்டப்படி பெற்றனர்.  அறிக்கையிலும் ஆசிரியர் சில்மிசம் உண்மை என சொல்லியிருக்கிறார்கள். இதற்கிடையில் புகார் கொடுத்த மாணவிகளை மிரட்டிவிட்டார்கள். இதன்பின்பு விசாரணை அறிக்கை அடிப்படையில் தேசிய மனித குழந்தை உரிமை ஆணையத்தில் சொக்கு, ஆனந்தகுமார் புகார் செய்தார்கள். புகாரின் மீது சென்னையில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தினார்கள்.விசாரணை என்றவுடன் கல்வித்துறை துரிதமாக  செயல்பட்டார்கள். 14.10.2012 அன்று பணியிலிருந்து தற்காலிக பணிநீக்கம் செய்து உத்திரவிட்டுள்ளார்கள்.

பள்ளத்தூர் காவல்துறை ஆய்வாளர் விசாரணையில் நேரில் ஆஜாரானார்.அப்போது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி கேட்கப்பட்டது. வரும் 15 தினங்களில் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க தேசிய மனித ஆணையம் உத்திரவிட்டுள்ளார்கள். இத்தகவiலை மக்கள் கண்காணிப்பக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சொக்கு தெரிவித்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post