Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மத்திய அரசுக்கான ஆதரவு குறித்து இன்று முக்கிய முடிவு - மாயாவதி

மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் இதனை அறிவித்த அவர் மத்திய அரசு மக்கள் விரோதப் போக்கை கடைபிடித்து வருவதாகவும் சொந்த நாட்டை அந்நிய சக்திகளுக்கு விற்றுவிடுவதாகவும் தெரிவித்தார்.மேலும் மத்திய அரசு ஊழல் நிறைந்த அரசாக மாறிவருவதாகவும் நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வரும் எனவும் கூறினார். 

பகுஜன் சமாஜ் கட்சி மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகிறது. மக்களவையில் 21 எம்.பிக்களைக் கொண்ட இக்கட்சி தன் ஆதரவை விளக்கிக் கொண்டால் மத்திய அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்ப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாயாவதியின் இந்த அறிவிப்பை அடுத்து டெல்லி அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post