Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் கரை ஒதுங்கும் விசித்திர உயிரினங்கள் (படங்கள்)

மட்டக்களப்பு காத்தான்குடி வங்காள விரிகுடா கடற்கரையில் இரண்டாவது நாளாகவும் பல வகையான சிறிய , பெரிய மீன்களும் ஒரு வகையான பாம்பு இனங்களும் பெரிய ரக ஆமையொன்றும் உயிரற்ற நிலையில் கரையொதுங்கியுள்ளன. 

இதனைப் பெருமளவிலான மக்கள் பார்வையிட்டனர். மேலும் இவ்வாறு கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ச்சியாக கரையொதுங்குவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 இதேவேளை காலநிலை சீரற்றநிலையில் காணப்படுவதுடன் மழையுடன் காற்றும் காணப்படுகின்றது.

இதை அடுத்து அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கடந்த முறை சுனாமி வருவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.











[vuukle-powerbar-top]

Recent Post