
கூலித் தொழிலாளியான கிருஷ்ணமூர்த்தியின் மகன் ஏழுமலைக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்ததை அடுத்து வானியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சிறுவன் அடுக்கம்பாறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
டெங்கு காய்ச்சல் இருப்பது அங்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் இறந்துள்ளான்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் அதிகம் இருப்பதாகவும், இது குறித்து அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.