Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"பிரியாணி" படத்தில் நான் தான் நாயகன்- பிரேம்ஜி அமரன்.


அண்மையில் வெளியாகவுள்ள "பிரியாணி" படத்தில் நான்தான் நாயகன் என அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் பிரேம்ஜி அமரன்.கார்த்தி நடிப்பில்  , வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வருகிறது "பிரியாணி" திரைப்படம்.இப்படத்தில் நகைச்சவை வேடம் ஏற்றிருக்கும் நடிகர் பிரேம்ஜி, தன் அண்ணன் இயக்கத்தில் தயாரான படங்களில் "மங்காத்தா" படத்தை தவிர ஏனைய படங்களில் தான்தான் நாயகன் என்று தெரிவித்திருந்தார்.

அண்ணன், தம்பி இருவருக்குமிடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது.அதாவது வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் பிரேம்ஜி நடிக்கவில்லை என்றால், அப்படத்திற்கு இசையமைக்கும் பணியாவது அவருக்கு கிடைக்க வேண்டும் என்பதே அது. ஆயினும் தன்னுடைய படங்களின் இசையை மிக அழகாக்கித் தரும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை மாற்ற துணிவில்லாமல்,பிரேம்ஜியை தன் படங்களில் நடிக்க வைக்கிறார் வெங்கட்.

தன்னுடைய இயல்பான நடிப்பினாலும்,தோற்றத்தாலும் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வரும் பிரேம்ஜிக்கு, ஏனைய இயக்குனர்கள் வாய்ப்பு தர மறுக்கும் பட்சத்தில்,தன் அண்ணனின் படங்களே அவருக்கு போதுமானதாக அமைந்துள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post