Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒருவர் பலி

சிவகாசி அடுத்து முதளிப்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒரும் தொழிலாளி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

அவர் மதுரை அரசு ராஜாதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பௌனுதாய் என்று தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது உடல் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

அதன் பின்னர் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சிவகாசி அடுத்து முதளிப்பட்டியில் உள்ள ஓம் ஷக்தி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கடந்த மாதம் 39 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post