Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திவிநெகும சட்டமூலத்தை புதனன்று நாடாளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்ற இலங்கை அரசு திட்டம்

மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பறிக்கும் திவி நெகும சட்டமூலத்துக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வரும் புதன்கிழமை இந்தச் சட்டமூலத்தை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

வரும் புதன்கிழமை இந்தச் சட்டமூலத்தை இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். 

அன்றைய தினம் அரசதரப்பு உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றில் கட்டாயம் சமூகமளித்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

திவி நெகும சட்டமூலத்துக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையிலேயே இலங்கை அரசாங்கம் வரும் புதன்கிழமை அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. 

வடக்கு மாகாணசபையின் அங்கீகாரத்தை பெறாமல், ஆளுனரின் ஒப்புதலுடன் இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மனு அரசியலமைப்பு விவகாரங்களுடன் தொடர்புடையது என்பதால், உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை தற்போது நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடுகள் தொடர்பாக வரும் செவ்வாய்க்கிழமை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். 

அன்றைய தினம் இலங்கை நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக சபாநாயகர் சமல் ராஜபக்ச அறிக்கை ஒன்றையும் வெளியிடவுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post