Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மக்கள் பட்டினி கிடந்து மருந்து வாங்கும் நிலை - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

இந்தியாவில் உண்ணும் உணவை விட மருந்தின் விலை அதிகமாக உள்ளது.ஏன் இந்த நிலை?மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம். 

கடுமையான மருந்து விலையேற்றத்தால் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.மக்களின் நிலையை புரிந்து கொள்ளாமல் மருந்தின் விலையை அதிகமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு.மேலும் இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிடுகையில் சாமானிய மக்களால் மருந்து வாங்க முடியவில்லை.மக்கள் பட்டினி கிடந்து,உணவுக்காக செலவழிக்கும் பணத்தை மருந்து வாங்க செலவழிக்கின்றனர் என்றனர்.

மேலும் உயிர் காக்கும் மருந்துகளை அத்தியாவசிய மருந்துபட்டியலில் சேர்க்க வேண்டும்.இதற்கு மேல் மருந்தின் விலையை கூட்டினால் அது மக்களை மிகவும் பாதிக்கும் எனவும் மத்திய அரசு மருந்தின் விலையை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 

மக்களின் வாழ்க்கை நிலையை விட மருந்து நிறுவனங்களின் ஆதாயத்திற்கே மத்திய அரசு வேலை பார்க்கிறது.மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பல அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.மேலும் அந்நிய முதலீடு இந்தியாவிற்கு வரவிற்கும் நிலையில் இது இன்னும் அதிகரிக்கும் எனவும் மக்கள் அச்சப்படுகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post