Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சேது சமுத்திர திட்டம் தொடர்பில் தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்துள்ளார் மு.கருணாநிதி

சேது சமுத்திர திட்டம் தொடர்பில் தமிழக அரசு கொண்டிருக்கும் நிலைப்பாட்டை தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.கருணாநிதி கண்டித்துள்ளார்.

இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் மன்னாருக்கும் இடையிலான கடல் பகுதியில் காணப்படுகின்ற இராமர் பாலம் என்றழைக்கப்படுகின்ற மணற்திட்டுக்களை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு வெளியிடும் கருத்துக்களை மு.கருணாநிதி விமர்சித்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. இராமர் பாலத்தை விடுத்து தனுஷ்கோடி வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஏற்கனவே இந்திய மத்திய அரசு நிபுணர் குழுவொன்றையும் நியமித்திருந்தது.

இந்தக் குழுவின் அறிக்கைக்கு அமைய மாற்றுப் பாதையின் விளைவாக கடும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சேது சமுத்திரத்திட்டம் கைவிடப்பட்டு அப்பகுதி தேசிய சின்னமாக அறிவிக்கப்படவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு நற்பெயர் கிடைக்கும் என்பதால் தமிழக அரசு அதனை தடுப்பதற்கு முயற்சிப்பதாக மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post