Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியின்றி தேர்வு

தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் புதிய தலைவரை தேர்வு செய்ய கடந்த 10-ந் தேதி சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூடியது. அதில், துணை சபாநாயகராக இருந்த பி.தனபால், சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அன்றே அவர் பதவியேற்றுக்கொண்டார்.

அதையடுத்து துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பை சபாநாயகர் பி.தனபால் வெளியிட்டார். துணை சபாநாயகர் தேர்தலுக்கான தேதி வெளியானதும், அந்த பதவிக்கு போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளராக பொள்ளாச்சி ஜெயராமன் பெயர் அறிவிக்கப்பட்டது. மறுநாள் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இறுதிநாளான நேற்று முன்தினம் நண்பகல் வரை, பொள்ளாச்சி ஜெயராமனை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் சபாநாயகர் பி.தனபால் வெளியிடுகிறார். அதைத் தொடர்ந்து துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் பதவி ஏற்பார்.
[vuukle-powerbar-top]

Recent Post