Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுரை ஆதின மடத்தின் மடாதிபதியாக உள்ள அருணகிரிநாதரை நீக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மதுரை ஆதின மடத்தின் மடாதிபதியாக உள்ள அருணகிரிநாதரை நீக்க கோரியும், மடத்தை அரசிடம் ஒப்படைக்ககோரியும் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால் சிறப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 

மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் அருணகிரி நாதரும், நித்தியானந்தாவும் இணைந்து சட்டத்திற்கு புறம்பாக அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளதாக அந்த மனுவில் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

மடத்தின் சொத்துக்களை இந்து அறநிலையத்துறையின் அனுமதியின்றி விற்றுள்ளதாகவும், அருணகிரிநாதர் உயிருடன் இருக்கும் போது, நித்தியானந்தாவிற்கு பதவிப் பிரமாணம் செய்தது சட்டத்திற்கு புறம்பானது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனும், அருணகிரிநாதர் தரப்பில் வழக்கறிஞர் நாகேந்திரனும் ஆஜராகினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குருவையா, இறுதிக்கட்ட வாதத்திற்காக வழக்கினை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post