Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தி.மு.க., தலைவர் கருணாநிதி மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு

சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஸ்டாலின், அழகிரி, அன்பழகன், கனிமொழி உள்பட கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

செயற்குழு கூட்டத்தில் : 

கேல்கர் குழு பொருளாதார சீர்திருத்த கொள்கைகளை மத்திய அரசு புறக்கணிக்க வேண்டும்,காவிரி நீர் பிரச்னையில் தமிழக அரசு மற்ற கட்சிகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதற்கு கண்டனம், டெசோ மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய திமுக தலைவர் கருணாநிதிக்கு பாராட்டு,ஈழத் தமிழர்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு உரிமைகளை மீட்க இந்திய அரசு முனைப்புன் செயல்பட வேண்டும்,சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவினை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் ஆகிய தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும், அ.தி.மு.க., அரசினை கண்டித்து சென்னை ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலும், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும் வருகின்ற அக்டோபர் 5ம் தேதியன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும் எனவும் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post