Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜமௌளியின் படத்தை இயக்கும் கண்ணன்.

இயக்குனர் ராஜமௌளியின் "நான் ஈ" படத்தை தமிழில் விநியோகித்த "பிவிபி" படத் தயாரிப்பு நிறுவனம் அவருடைய இன்னுமொரு தெலுகு படைப்பான "மரியடா ராமண்ணா" படத்தை தமிழில் தயாரிக்க முடிவி செய்திருப்பதாக கூறப்பட்டது.

இதை தற்போது உறுதிப்படுத்தியுள்ள "பிவிபி" படத் தயாரிப்பு நிறுவனம், இந்தியில் வெளியான "டெல்லி பெல்லி" படத்தின் தமிழ் மொழியாக்கப் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் இயக்குனர் கண்ணன் அவர்களே மேற்படி படத்தையும் இயக்க இருப்பதாக கூறியுள்ளது.

1923 ஆம் ஆண்டு வெளியான "அவர் ஹோச்பிடாளிட்டி" படத்தின் கதையை தழுவி தயாரிக்கப்பட்டுள்ள இப்படமானது கன்னடம் மற்றும் பெங்காலி மொழிகளில் தயாரிக்கபட்டுள்ளது. இந்தியிலும் மீள் தயாரிக்கப்பட்டுள்ள  இப்படம் " சன் ஒப் சர்தார்" என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் சோனாக்ஷி சிங்கா ஆகியோர் நடித்துள்ளனர். மிக விரைவில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது இப்படம்.

தமிழ் மொழியாக்கப்  படத்திற்கான நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு செய்யப்படாத நிலையில், மிக விரைவில் அதற்கான அறிவுப்புக்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post