Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பீரிஸ் சொல்கிறார்-இப்போது இந்தியா தமக்குப் பின்னால் தான் நிற்கிறதாம்

இந்தியா இப்போது எமக்குப் பின்னால் உள்ளது என்று இலங்கை வெளிவ்வகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

புரொன்ட்லைன் இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

“கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக இந்தியா அளித்த வாக்கு எமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஆட்டத்தையே மாற்றக் கூடிய நிலையில் இந்தியா இருந்தது. 

ஆனால் இப்போது இந்தியா எமக்குப் பின்னால் உள்ளது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. 

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானது என்று இந்தியாவைப் போலவே நாமும் புரிந்து கொண்டுள்ளோம். 

ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர், குறுகிய காலத்தில் ஆறு இந்திய அமைச்சர்கள் இலங்கைக்குப்  பயணம் மேற்கொண்டுள்ளனர். 

தீர்வை விரைவுபடுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுப்பதாக நாம் உணரவில்லை. 

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில், பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறுகின்றனர். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மையத்தில் வைப்பது தான் இப்போதுள்ள பிரச்சினை.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post