Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளத்தில் இரண்டாயிரம் படகுகள் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு முழக்கம்



கூடங்குளத்தில் இரண்டாயிரம் படகுகள் அணுமின் நிலையத்தை முற்றுகை  . 


கூடங்குளம் அணுமின் நிலையத்தை தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் சூழ்ந்து கொண்டு முற்றுகை போராட்டம் நடத்துகின்றன. அணு உலையை மூடவேண்டும் என்று போராடக் காரர்களின் முழக்கங்கள் விண்ணை எட்டுகிறது. சில பெண்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை காவல் துறை எந்த வன்முறையிலும் ஈடு படவில்லை. மூன்று படகுகளில் கடலோர காவல் படை ரோந்து பணியில் உள்ளனர் . இந்திய கடற்படைக்கு சொந்தமான பெரிய கப்பல் ஒன்றும் கடலில் அருகாமையில் நிலை கொண்டுள்ளது. மேலும் மீனவர்கள் பல பகுதிகளில் இருந்து வந்து கடலில் குவிந்த வண்ணம் உள்ளனர். காவல்துறை கடற்கரையில் இருந்து தொலைநோக்கு கருவியின் உதவியுடன் போராடக் காரர்களை கண்காணிக்கிறார்கள். 

- கூடங்குளம் கடலில் இருந்து நமது அலை செய்தியாளர் . 
[vuukle-powerbar-top]

Recent Post