Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி முதல் தேதி 18 வயது பூர்த்தியடைபவர்கள், இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். 

வயதுச் சான்றாக பிறப்புச் சான்றிதழ், பள்ளிக் கூட சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் நகல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம். இதேபோன்று வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யவும், பெயரை நீக்கவும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

குறிப்பாக ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம், சரியான புகைப்படம் இடம்பெற செய்யவும் இன்றுமுதல் வரும் 31ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். மேலும் பட்டியலில் பெயர்களை சேர்க்க மற்றும் நீக்க உதவும் வகையில் வரும் 6, 9 ஆகிய தேதிகளில் கிராம சபையில் வரைவு வாக்காளர் பட்டியல் வாசிக்கப்பட உள்ளது. 

அடையாள அட்டை தொலைந்துவிட்டால் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தத்திற்கு தேவையான படிவங்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். 

இதுதவிர ceotamilnadu.nic.in என்ற இணையதளத்திலும் தமிழக அரசின் தேர்தல் பிரிவு இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post