Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஹாலிவுட்டின் முக்கிய நபரை சந்திக்கும் கமல்.


ஒவ்வொரு வருடமும் "எப்.ஐ.சி.சி.ஐ." மூலமாக நடாத்தப்படும், ஊடகம் மற்றும் வியாபாரம் தொடர்பான ஊடகவியலாளர் கருத்தரங்கில் நடிகர் கமல்ஹாசன் தொடர்புகொண்டு தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்யவுள்ளார்.

சினிமா துறையில் தற்போது காணப்படும் நவீன தொழில்நுட்பம் தொடர்பாகவும் இக்கருத்தரங்கில் ஆழமாக விவாதிக்கப்படவுள்ளது.சென்னையில் வரும் அக்டோபர் மாதம் 16 மற்றும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் மிக முக்கிய நபர் ஒருவர் இம்முறை கலந்துகொள்ளவுள்ளார்.

"லோர்ட் ஒப் த ரிங்க்ஸ்"  ஹாலிவூட் படத்தில் பணியாற்றிய "பாரி ஒஸ்போர்ன்" அவர்களே மேற்படி கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்.

 கமல்ஹாசன் படங்கள் என்றாலே ஹாலிவூட் தரத்திற்கு பேசப்படும் இன்றைய காலகட்டத்தில் ஹாலிவூட் கலைஞர் ஒருவர் சென்னையில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் நிகழ்வானது, தமிழ் சினிமாவின் முக்கிய தருணமாக கருதப்படுகிறது.

[vuukle-powerbar-top]

Recent Post