Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மணல் அள்ளும் மோதலால் அ.தி.மு.க கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு

திருவள்ளூர் அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற, மாவட்ட அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 6 பேரை, அதேகட்சியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் அரிவாளால் வெட்டினர்.

ஆரணி ஆற்றில், அதிமுக பிரமுகரான கோதண்டம் என்பவர் திருட்டுத்தனமாக மணல் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. 

இதனை திருவள்ளூர் மாவட்ட அதிமுக கவுன்சிலர் சந்திரன் கண்டித்ததால் இரு தரப்பினரிடையே முன்விரோதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், நேற்றிரவு ஆற்றில் மீண்டும் மணல் அள்ளியவர்களை சந்திரன் கண்டித்துள்ளார். 

அப்போது, கோதண்டம் தலைமையிலான 15 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதில், சந்திரன் உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக, 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post