Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"கும்கி" படத்தின் நாயகனாக மாறிய படப்பிடிப்பு தளங்கள்.


இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் "கும்கி"படத்திற்கான படப்பிடிப்பு தளங்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டன என்பது குறித்து தன்னுடைய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட இயக்குனர் பிரபு சாலமன்,

"கும்கி" படத்திற்கான ஒவ்வொரு காட்சிக்காகவும் மிக பொறுமையாக படக்குழுவினர் காத்திருந்ததாகவும்,இப்படத்தில் வரும் "அய்யய்யய்யோ ஆனந்தமே" என்ற பாடலின் படப்பிடிப்பை "ஜோக்" நீர்வீழ்ச்சியில் படமாக்க தீர்மானித்திருந்த வேளையில்,ஆகஸ்ட் மாதத்திலேயே அங்கு மிக அதிகமான நீர்வீழ்ச்சியை காண முடியும் என்பதால் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள்  வரை தாம் பொறுமையாக காத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

அத்தோடு இப்படத்தின் ஆரம்ப காட்சிகளை புதிதாக உழுத வயல் வெளியில் படமாக்கியதாகவும்,பின்னர் படத்தின் இறுதிக் காட்சிக்காக, வயலில் பயிர் அனைத்தும் அறுவடைக்கு தயாராகும் வரையில் சுமார் ஆறு மாதகாலம்  காத்திருந்து படமாகியதாகவும் தெரிவித்தார்.

"மைனா" படத்தின் மூலமாக மிக சிறந்த இயக்குனராக உயர்ந்துள்ள பிரபு சாலமனின் புதிய படைப்பான "கும்கி" அனைவரையும் கவரும் விதத்தில் உருவாகி வருகிறது.

[vuukle-powerbar-top]

Recent Post