Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இளையராஜா குடும்பத்தில் மீண்டும் ஒரு இசையமைப்பாளர்.


இசைஞானி இளையராஜா தமிழ்  சினிமா உலகிற்கு இசை ரீதியில்  ஆற்றிய பணியை அவரது மகன்களான கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் தொடர்கின்றனர். தந்தையை போலவே இவர்களது இசையும் மிக அழகாக லயம் பாடுகின்றன.

இப்போது இவர்கள் வரிசையில் மீண்டும் ஒரு இசைஞானி வாரிசு தன் இசைப் பணியை தொடங்கவுள்ளது. இளையராஜாவின் மகளான அந்த வாரிசு, ஏற்கனவே தன்னுடைய பிரத்தியேகமான குரல் வளத்தால் "பாரதி" படத்தில் இடம்பெற்ற "மயில் போல பொண்ணு ஒன்னு...." என்ற பாடலுக்காக தேசிய விருதை தட்டிச் சென்றது.

பாடல் பாடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த பவதாரணி இயக்குனர் வேலு விஸ்வநாத் இயக்கும் "வெள்ளச்சி" என்ற படத்திற்காக இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளார்.

ஏற்கவே ரேவதி இயக்கிய, குறும்படத்திற்கான தேசிய விருது பெற்ற  "மித்ரு, மை பிரண்ட்" என்ற படத்தில் இசையமைப்பாளராக பவதாரணி பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

[vuukle-powerbar-top]

Recent Post