Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"ஆதி பகவன்" படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றும் நீத்து சந்திரா.


மிஷ்கின் இயக்கத்தில் உருவான " யுத்தம் செய்" படத்தில் "கன்னித்தீவு பொண்ணா.." என்ற  பாடல் காட்சியில் இயக்குனர் அமீருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட நீத்து சந்திராவின் நடன அசைவுகள் மிக பிரபலமாக பேசப்பட்டது.பிரபல நடிகை ஒருவர்  ஒரு பாட்டிற்கு குத்தாட்டம் போடுவது என்பது, பட வாய்ப்புக்கள் அவர்களுக்கு கிடைக்காத பட்சத்திலேயே ஏற்படும் ஒரு விடயமாகும்.ஆயினும் அமீருடன் சேர்ந்து நடிக்க ஒரு வாய்ப்பு என்பதாலேயே இதற்கு சம்மதித்திருந்தார் நீத்து.

இப்போது அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக "ஆதி பகவன்" என்ற படத்தில் நடித்து வருகிறார் நீத்து சந்திரா.இப்படத்தில் "மார்ஷியல்" கலையை கற்ற ஒரு பெண்ணாக நடித்து வரும் அவர் பல சண்டைக் காட்சிகளில்  மிக அபாரமாக நடித்துள்ளார்.கராத்தே மற்றும் "மார்ஷியல்" கலையை  இவர் முறைப்படி கற்றுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், உண்மையிலேயே தான் "மார்ஷியல்" கலையை கற்றுள்ளதாகவும், ஒவ்வொரு பெண்ணும் தன்னை ஆபத்துக் காலங்களில் காத்துக் கொள்ள இவ்வாறானதொரு கலையை நிச்சயம் கற்று வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post