Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அசைவூட்டப் பெருவிழா.


"மாயா அகாடமி ஒப் அட்வான்ஷ்ட் சினிமாடிக்ஸ்" நிறுவனமானது உலக இலத்திரனவியல் அசைவூட்டம் ( அனிமேஷன்) தினத்தையொட்டி பல செயல் திட்டங்களை நடாத்தவுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் முழுவதும் , போட்டி நிகழ்சிகள்,பயிற்சி பட்டறைகள்,கருத்தரங்குகள் மற்றும் விஷேட அதிதிகளின் சிறப்பு உரை என பல தரப்பட்ட வேலைப்பாடுகள் நடைபெறவுள்ளது.

இதிலும் குறிப்பாக இன்றைய உலக சினிமாவில் பரவியுள்ள முப்பரிமாண காட்சியமைப்பு தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.குறும்படங்களை முப்பரிமாண காட்சியமைப்புடன்  எடுப்பது தொடர்பாக ஒரு போட்டி நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

தமிழ் சினிமா வல்லுனர்கள் பல பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.இம்மாபெரும் நிகழ்ச்சியின் கடைசியாக வரும் அக்டோபர் 27 ஆம் தேதி "பரிமான் 2012 " என்ற மிக பெரிய விழா நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை ஆற்றவுள்ளனர்.

[vuukle-powerbar-top]

Recent Post