Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுரையில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்

தமிழகத்தில் தொடர்மின்வெட்டைக் கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் அமலில் இருக்கும் தொடர்மின்வெட்டால் பல இடங்களில் போரட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வாருகிறது.இந்த நிலையில் மதுரையில் சென்னை உயர் நீதிமன்றக்கிளை வழக்கறிஞர்கள் கையில் மெழுகுவர்த்தியுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் அந்தப் பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.இதேபோல் மேட்டுப்பாளையத்திலும் விவசாயிகள் மிவெட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் மின்வெட்டால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இது போன்ற போராட்டங்கள் இன்னும் தீவிரமடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post