Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கடலில் இருந்து விரட்டியுள்ளனர்.


நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம் போல மீன்பிடிக்க சென்றுள்ளனர். நாகப்பட்டினம் அருகே உள்ள கோடியக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.மேலும் வலையை அறுத்தும் மீன்களை கடலில் வீசியும் அட்டூழியம் செய்துள்ளனர்.இதனால் பயந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை விட்டுவிட்டு கரையை வந்தடைந்தனர்.

இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மீனவர்கள் பயத்தில் உள்ளனர்.ஆனால் மத்திய அரசோ நட்பு நாடான இலங்கையை எந்தக் கேள்வியும் கேட்பதில்லை.தமிழ்நாட்டை விட இலங்கையையே மத்திய அரசு முக்கியமாக நினைக்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post