Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நீதிபதிகள் தவறிழைத்தால், பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ~ உயர்நீதிமன்றம்

நீதிபதிகள் தவறிழைத்தால், பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம் ஒய் இக்பால் எச்சரித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற புதிய மாஜிஸ்திரேட்டுகளின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அவர், குற்றச்சாட்டுகளை தவிர்க்கும் விதமாக சமூக கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று நீதிபதிகளைக் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் பணிபுரியும் 900 நீதிபதிகளில் 500பேர் மீது புகார்கள் வந்திருப்பதாக கூறிய அவர், குற்றச்சாட்டுகள் தொடர்பாக பரிசீலித்து வருவதாகவும் கூறினார்.

நீதிபதிகளாக பணியாற்றும் போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடம் தரக் கூடாது என்றும் தலைமை நீதிபதி வலியுறுத்தினார். தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட 167 மாஜிஸ்திரேட்டுகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். மாஜிஸ்திரேட்டுகளுக்கான தேர்வை உயர் நீதிமன்றம் முதன் முதலாக நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post