Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வேலைவாய்ப்பு ஆசை காட்டி ஏமாற்றப்படும் இளைஞர்கள் அதிர்ச்சித் தகவல் - சிறப்புக் கட்டுரை

கடந்த சில மாதங்களாக இளைஞர்களைக் குறிவைத்து பல பண மோசடிகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் அலை செய்திகளுக்கு ஒரு இளைஞன் கொடுத்த தகவலின் படி மோசடி பற்றிய ஒரு உண்மை சம்பவத்தைப் பார்ப்போம்.

 நேர்முகத் தேர்விற்க்கான அழைப்பு
குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஒரு இளைஞன் பொறியியல் தகவல் தொழில்நுட்பம்(information technology) நான்கு வருட படிப்பை முடித்துக் கொண்டு வேலை தேடிக் கொண்டிருந்தான்.இதே வேளையில் அதே கல்லூரியில் படித்த கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் தோழியும் வேலை தேடிக் கொண்டிருந்தார்கள்.அப்பொழுது அந்த கேரளாவைச் சேர்ந்த பெண் ஒரு மென்பொருள் நிறுவனத்தின்(software company)நேர்முகத் தேர்விற்கு சென்றுள்ளார்.அவருடன் சேர்ந்து பலரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.ஆனால் அந்த நிறுவனத்திற்கு முன்பணமாக 20,000 ரூபாயை தேர்ச்சியடைந்த ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டும்.அந்த நிறுவனம் அளிக்கும் 2 மாதம் பயிற்சி வகுப்புக்கு அந்தப் பணம் வசூலிக்கப்படுகிறது என்று கூறப்பட்டது.இதற்கு முன் பலரும் அந்த நிறுவனத்தில் வேலைபார்த்து வருவதால் சந்தேகமின்றி தேர்ச்சியடைந்த அனைவரும் 20,000 பணத்தைக் கட்டி சேர்ந்துவிட்டனர்.தேர்ச்சியடைந்த அனைவருக்கும் இந்தியாவின் பிரபல நகரமான புனே(pune)வில் பயிற்சி(training) அளிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் பதியப்பட்டுள்ளது
இதனைக் கேள்விப்பட்ட வேலைதேடும் இளைஞர்கள் பலர் வேலைக் கிடைத்தால் போதும் என்று 20,000 ரூபாய் பணத்தைக் கட்டி சேரத் தொடங்கினர்.அந்த பெண் தோழியிடம் தொடர்பு கொண்ட இந்த குமார் இதைப் பற்றி விசாரித்தான்.முதலில் சந்தேகமடைந்த அவன் அதனை தெளிவுபடுத்திக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கான இந்திய அமைச்சகத்தின் இணையதளத்தை(www.mca.gov.in) அனுகினான்.ஆம் இந்த இணையதளத்தில் இந்தியாவில் இயங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அங்கீகாரத்தை அறிந்து கொள்ளாலாம்.அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரும் அதில் பதிவாகியுள்ளது.எனவே சந்தேகத்திற்கு இடமில்லாமல் இவனும் தனக்கு தெரிந்த சில நண்பர்களுடன் கலந்தாலோசித்து 10 நண்பர்களுடன் 20,000 முன்பணத்தைக் கட்டி சேர்ந்துவிட்டான்.இதில் இன்னொரு காரணமும் உள்ளது முதல் மாத சம்பளத்தில் தான் கட்டிய 20,000 பணத்தில் இருந்து 15,000 கிடைத்துவிடும் என்பதால் அனைவரும் நம்பிக்கையுடன் சேர்ந்தனர்.அவனுடன் சேர்ந்த அனைவருக்கும் பெங்களூரில் ஒரு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி(training) அளிக்கப்பட்டது. 

இந்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் பதியப்பட்டுள்ளது
இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்ன வென்றால் பயிற்சி வகுப்புகள் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தால் அளிக்கப்படவில்லை.புனேவிலும் பெங்களூரிலும் இருக்கும் சில பிரத்யேக பயிற்சி நிறுவனங்களால்(training center) நடத்தப்பட்டது.அனைவரும் மகிழ்ச்சியுடன் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று கொண்டிருந்தனர்.ஆனால் 10 நாட்களுக்குதான் அந்த மகிழ்ச்சி.திடீரென பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டன.காரணம் கேட்க எங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பணத்தை அந்தக் குறிப்பிட்ட நிறுவனம் கொடுக்கவில்லையென்று பயிற்சி கொடுத்த நிறுவங்கள் கைவிரித்துவிட்டன.இதனால் அதிர்ச்சியடைந்த என் நண்பனும் அந்தக் குழுவும் கேரளாவில் இயங்கும் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.மீண்டும் ஒரு பேரதிர்ச்சி காரணம் நிறுவனம் மூடப்பட்டிருந்தது.

அங்கே இருந்த சிலரிடம் விவரம் கேட்ட போது நிறுவனத்தின் உரிமையாளரை சில நாட்களாக காணவில்லை என்று கூறியுள்ளனர். நன்றாக ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்த அவர்களுக்கு இன்னொரு விடயமும் தெரியவந்துள்ளது.இந்தியா முழுவதும் இவர்களைப் போல் ஆயிறத்திற்கும் மேற்ப்பட்டோர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.மேலும் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்களிடம் இருந்த அந்த நிறுவனம் தொடர்பான ஆவணங்களை வைத்து ஒரு வழக்குப்பதிவை செய்துவிட்டு இனி என்ன செய்வதென்று தெரியாமல் மன விரக்தியுடன் ஊர் திரும்பியுள்ளனர்.காவல்துறையினரும் ஏமாற்றியவனை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் ஒரு முன்னேற்றமும் ஏற்ப்படவில்லை. 


பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அளித்துள்ள புகார்
இதில் பரிதாபமான நிலை என்னவென்றால் ஏமாற்றப்பட்டுள்ளவர்களில் பலர் நடுத்தர மற்றும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்கள்.20,000 ரூபாய் சிறிய தொகை என்றும் கூறிவிடமுடியாது.இதில் குமாரைப் போன்ற பலர் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை வீட்டில் பெற்றோர்களிடம் கூட சொல்லமுடியாத நிலையில் உள்ளனர்.இன்றும் அந்தக் குமார் என்ற இளைஞன் விரக்தியுடன் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை மறைத்தும் மறைக்க முடியாமலும் தவித்துக் கொண்டிருக்கிறான். 

இது மட்டும் அல்ல இதே போல் பலரும் பல வழிகளில் ஏமாந்துள்ளனர்.குறிப்பாக பல போலி நிறுவனங்கள் வேலை தேடும் பட்டதாரி இளைஞர்களைக் குறிவைத்து பல மோசடிகளை நடத்திவருகிறது. 

இதில் இந்த சமூகத்தின் பார்வையும் பெரும்பங்கு வகிக்கிறது.இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இந்த நிலையில் குறிப்பாக வேலைதேடும் இளைஞர்களுக்கு பல சாவால்கள் உள்ளது.பெற்றோர்களுக்காகவும் சமூகத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாமலும் விரக்தியுடன் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற நோக்கத்தில் போலிகளின் பிடியில் சிக்கிவிடுகின்றனர்.

தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டிய இந்த வயதில் வேலைதேடும் இளைஞனின் மனம் குழப்பத்துடனே காணப்படுகிறது.இதற்கு காரணம் அவன் மேல் இந்த சமூகம் வைக்கும் ஒரு கேவலமான பார்வையே.வேலை தெடும் இளைஞனின் மனம் பலவீனமானது என்பதை நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டு பல போலி நிறுவனங்கள் கவனாமாக செயல்படுகிறது. 

மேலும் இளைஞர்கள் இது போன்ற நிறுவங்களிடம் மிக கவனமாக இருக்க வேண்டும்.முன் பணம் என்று எங்கு கேட்டாலும் கவனமுடன் இருக்க வேண்டும்.முன்பணம் என்று கேட்டாலே அதில் சேராமல் இருப்பது மிகவும் நல்லது.

அடுத்து பல ஊர்களில் இருந்து வந்து சென்னையில் வேலை தேடும் இளைஞர்களின் நிலையைப் பற்றியும் சமூகத்தின் பார்வையைப் பற்றியும் ஒரு கட்டுரையுடன் சந்திப்போம்.
[vuukle-powerbar-top]

Recent Post