Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருப்பெரும்புதூரில் கவுன்சிலர் கொடூரமாக வெட்டிக் கொலை: தொழில் போட்டி காரணமா?

காந்தி பிறந்த நாள் பரிசு!
திருப்பெரும்புதூரில் திங்கள்கிழமை கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டு, ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளி ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

திருப்பெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் பி.பி.ஜி.குமரன் (33) (படம்) . ஸ்ரீபெரும்புதூர் 9-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர். இவர், திருப்பெரும்புதூர் பகுதியில் உள்ள தனது அலுவலகத்துக்கு திருப்பெரும்புதூர்- தாம்பரம் சாலையில் வந்துக் கொண்டிருந்தார்.

காரை அவரே ஓட்டி வந்துள்ளார். அவருடன் அவரது நண்பர் மதியழகன் (43) இருந்துள்ளார். இவரது காருக்கு முன்னால் நண்பர் சங்கர் மற்றொரு காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

திருப்பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் அருகே வரும்போது திருப்பெரும்புதூர் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார், சங்கர் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியதாம்.

இதனால், குமரனின் கார் நெரிசலில் சிக்கியுள்ளது. இதையடுத்து மோதிய காரில் இருந்து இறங்கி வந்த மர்மநபர்கள், குமரன் வந்த கார் மீது நான்கு நாட்டு வெடிகுண்டுகளை வீசினராம்.

காரின் அருகில் சென்ற 10 பேர் கொண்ட மர்ம நபர்கள் குமரனை வெட்டினராம். அவரது நண்பர்கள் சங்கர், மதியழகன் ஆகியோரையும் வெட்டினராம்.

திருப்பெரும்புதூர் நீதிமன்றம் அருகே போக்குவரத்தை சரிசெய்துக் கொண்டிருந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதைப் பார்த்த மர்ம நபர்கள் தாங்கள் வந்திருந்த வாகனங்களில் ஏறி தப்பினர். இதில் ஒருவரை போலீஸார் பிடித்து கைது செய்தனர். பலத்த காயம் அடைந்த குமரன், சங்கர், மதியழகன் ஆகியோரை திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post