Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ரூ.10 லட்சம் கேட்டு சென்னை மாணவன் கடத்தல்: காவல்துறை தேடுதல் வேட்டை!

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 24 சதவீதம் அதிகரிப்பு!
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மாணவன் ஜா‌க்க‌ப் சு‌தி‌‌ர் அ‌ங்கு‌ள்ள ரயில்வே பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவருகிறா‌ன். மாணவன் ஜாக்கப் சுதிர் நேற்று பள்ளிக்குச் சென்றவ‌ன் வீடு திரும்பவில்லை.

இது குறித்து மாணவனின் பெற்றோர் ஐ.சி.எப். காவல் நிலையத்தில் புகார்கொடுத்தனர். புகாரை அடுத்து, போலீசார் 2 தனிப்படைகள் அமை‌த்துதேடுதல் வேட்டையை தொட‌‌ங்கினர்.

கடத்தப்பட்ட மாணவனின் தந்தை, கடத்தல்காரர்கள் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் ரூ.10 ல‌ட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறினார்.

இந்த தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசா‌ர் மாணவன் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருப்பதை கண்டுபிடித்தனர். கடத்தல்காரர்கள் பிடியில் இருந்து மாணவனை மீட்க போலீசார் நெல்லூர் விரைந்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post