Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

குளிர்கால கூட்டத்தொடரை ஒத்திவைக்க திட்டம்: காங்கிரஸ் அரசு கவிழாமல் இருக்க புது வியூகம்!

கவிழப் போகும் காங்கிரஸ் அரசு! 
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், வழக்கமாக நவம்பர் 3வது வாரம் தொடங்கி டிசம்பர் இறுதி வரை நடைபெறும். இந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி இமாசலர் பிரதேசத்திலும், டிசம்பர் 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளன.

சில்லறை வணிகம், பென்ஷன், காப்பீடு ஆகியவற்றில் அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் விஷயத்தில் மத்திய அரசில் இருந்து விலகிய மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், குளிர் கால கூட்டத் தொடரில், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அத்துடன் மத்திய அரசின் இிந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆளும் கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இத்துடன் மம்தா கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று பாஜகவும் அறிவித்துள்ளது. இதனால் முலாயம் சிங், மாயாவதி ஆகியோர் கைவிட்டால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிச்சயமாக வெல்லும், அரசும் கவிழும்.

இதைத் தவிர்க்க நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரையே ஒத்தி வைத்துவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், ஆட்சிக்கு ஏற்படப் போகும் பாதகத்தில் இருந்து தப்பித்து விடலாம் என்றும் எண்ணுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post