Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருமணமான பெண் பாலியல் பலாத்காரம்: தர்மபுரி வாலிபர் கைது!

இப்படியும் ஏமா(ற்)றுகிறார்கள்!
தர்மபுரி அருகே உள்ள பெரும்பாலை சாணார் பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி தேன்மொழி (வயது 19). இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது.

இந்த நிலையில் வெங்கடேசன் வேலைக்கு சென்றபின் தேன்மொழியிடம் அதே பகுதியை சேர்ந்த சர்க்கரை மகன் முகுந்தன் என்பவர் சென்று அடிக்கடி பேசினார்.

மேலும் சந்திக்கும் வாய்ப்பு தொடர்ந்ததால் இது அவர்கள் இடையே நெருக்கத்தை அதிகரித்தது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட முகுந்தன் ஆசை வார்த்தை கூறி தேன்மொழியிடம் பழகி வந்தார்.

இதற்கிடையே மீண்டும் தனிமையில் சந்தித்த முகுந்தன் உன்னை திருமணம் செய்து கொண்டு கடைசி வரை காப்பாற்றுவேன் என்று தேன்மொழியிடம் உறுதி கூறினார். இதனை உண்மை என நம்பிய தேன்மொழி சம்பவத்தன்று முகுந்தனுடன் வெளியூர் சென்றார்.

பின்னர் பல்வேறு இடங்களுக்கு தேன்மொழியை அழைத்து சென்ற முகுந்தன் பெரும்பாலையில் தேன்மொழியை விட்டுவிட்டு சென்று விட்டார்.

கணவனை உதறி விட்டு முகுந்தனை நம்பி வந்தால் அவனும் ஏமாற்றி விட்டானே என ஆத்திரம் அடைந்த தேன்மொழி பெரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார்.

இது குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் பாலியல் பலாத்காரம் செய்ததாக முகுந்தனை கைது செய்து அவரிடம் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post