Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அமெரிக்கப் புயலின் தாக்கம்: அமெரிக்க அணு உலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசர எச்சரிக்கை!

பபுயலினால் பாதிக்கப்பட்டிருக்கும் அணு உலை!
அமெரிக்காவில் ஹரிகேன் சாண்டி புயலின் தாக்கத்தால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காற்றும் பலமாக உள்ளது. இதனால் அனைத்து இடங்களும் நீரில் மூழ்கி உள்ளன. அமெரிக்காவின் மிகப் பழமையான அணுஉலையிலும் நீர் உட்புகுந்துள்ளது. ஒஸ்டர் க்ரீக் எனும் 1969-இல் கட்டப்பட்ட அணு உலையில்  முறையான பராமரிப்பு இருந்தாலும் புயலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கடல்நீர் அணுஉலைக்குள் வரத் துவங்கி உள்ளது. இது எதிர்பாராத நிகழ்வு என அணுஉலை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 7 மணி முதல்  நிலைமை மோசமாகத் துவங்கியதாக தெரிவித்துள்ளனர். அணு உலை வெடிக்கும் அபாயம் இல்லையெனினும், அணு உலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் அவசர எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
[vuukle-powerbar-top]

Recent Post