Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சோனியா காந்தியின் மருத்துவ செலவு ரூ.1,880 கோடி: பொதுநல வழக்கு தொடர்கிறார் சுப்ரமணிய சுவாமி!

எலியும் பூனையும்...
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1,880 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியும் கூறியுள்ளனர்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மத்திய அரசு தேவையில்லாத செலவுகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சோனியா காந்தியின் அமெரிக்க சிகிச்சைக்காக ரூ1880 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது என்றார்.

இதனால் எரிச்சலான சுப்பிரமணிய சாமி, தனது ட்விட்டரில், "சோனியா காந்தியின் அமெரிக்க மருத்துவ சிகிச்சைக்கு ரூ1880 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தப் பணத்தை யார் கட்டியது என்பது குறித்து விரைவில் பொது நலன் வழக்கு தொடர இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post