Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முற்றுப் பெறுமா காவிரி விவகாரம்: பிரதமருடன் கர்நாடக தலைவர்கள் இன்று சந்திப்பு!

நல்ல தீர்ப்பு வழங்குமா உச்சநீதிமன்றம்?
கடந்த மாதம் நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட பிரதமர் ஆணையிட்டார். ஆனால் பிரதமர் உத்தரவையும் மதிக்காமல் கர்நாடகா மாநில அரசு காலம் தாழ்த்தி வந்தது. இதனை கண்டித்து தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கர்நாடகாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் உடனடியாக தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பித்தனர்.

இதனையடுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறந்து விடுவதால் கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படுவர் இந்த உத்தரவை பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகா முதல்வர் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post