Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கங்கை நதியில் புற்று நோய்க் காரணிகள் ஏராளம்: அதிர வைக்கும் உண்மைகள்!

கரை சேர்ந்த பிணம்: இன்னும் கரை சேரா மக்கள்!
கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் ஏராளமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. லட்சக்கணக்கான இந்தியர்களின் நீர் ஆதாரமாகவும், புனித நதியாகவும் கருதப்படும் கங்கை நதி நம் மக்களின் ஒழுங்கீனத்தாலும் அரசின் கவனமில்லாததாலும் முற்றிலும் மாசடைந்து விட்டது.

தொடர்ந்து ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளிலிருந்து நீர்நிலை பகுப்பில் கார்சினோஜென்ஸ் (Carcinogens) எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பதாக தேசிய புற்றுநோய் பதிவகம் அதன் ஆய்வின் முடிவில் கூறியுள்ளது. இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி இந்தியாவில் வாழும் மக்களில் கங்கை நதியை தங்களது நீர் ஆதாரமாக உபயோகிக்கும் மக்களுக்கு மற்றவர்களைவிட அதிகமாக புற்று நோய்க்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

இது குறித்து தேசிய புற்றுநோய் பதிவகம் வெளியிட்டுள்ள ஆய்வில், நதியில் கொட்டப்பட்டுள்ள கன உலோகங்கள் மற்றும் இரசாயனங்களால் பெருமளவு நீர் வாழ் நுண்ணுயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன, இது தற்போது எல்லா அளவுகோளையும் தாண்டி மக்களின் உயிரைப் பறிக்கக் கூடிய புற்று நோய்க் காரணியாக உருவெடுத்துள்ளது. 

இதற்கு பெரும்பாலும் பாதிக்கப்படக் கூடியவர்களாக உத்தர பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை நீண்டு செல்லும் அப்பகுதி வாழ் மக்களாக இருப்பார்கள். இந்த பகுதியில் உள்ள ஆற்றங்கரை நச்சு தன்மையுடன் இருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் அதிகமாக பாதிப்படைய கூடிய புற்று நோய் வகை, பித்தப்பை புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகும், இப்பகுதிகளில் வாழும் மக்கள் இந்த நோயால் அதிக பாதிப்பிற்கு உள்ளாக வாய்ப்புள்ளதாகவும் அவை நிரூபிக்கப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் ஒவ்வொரு 10000 மக்களிலும் 450 ஆண்களும் 1000 பெண்களும் பித்தப்பை புற்று நோயாளிகளாக இருப்பதாகவும் என்று தெரியவந்தது. சிறுநீரக புற்று நோய், உணவுக்குழாய், கல்லீரல், சிறுநீர்ப்பை மற்றும் தோல் புற்றுநோய் என பல்வேறு வகையான புற்று நோய்களாலும் இங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவலை இந்த ஆய்வு கூறியுள்ளது. இந்த விஷ ஆற்றில் குளிப்பவர்களுக்கும் இதே அளவு சம பாதிப்பு உள்ளதாக இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

பாவங்களை கரைக்கக் கூடிய இந்த நதி தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் கங்கையில் முங்கி எழுகின்றனர்.

இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு செல்வேண்டும் என்பதன் நம்பிக்கையில் இறந்தவர்களின் சாம்பலையும், உடலையும் கங்கை நதியில் விட்டுவிடுவதாலும் வாழும் உயிர்களுக்கு பெரும் பாதிப்பை மத நம்பிக்கையால் உருவாக்கியுள்ளோம் என்பதே உண்மை. 

முன்னதாக 2007-ம் ஆண்டே கங்கை உலகின் ஐந்து மிகவும் மாசுபட்ட நதிகளில் ஒன்றாக உள்ளதாகவும், வாரணாசி ஆற்றில் மலையளவு நுண்கிருமி வகை நூற்றுக்கணக்கில் உள்ளதாக கூற்ப்பட்டது. இதை அதிகாரப்பூர்வமாக இந்திய அரசாங்கமும் இந்த அறிக்கையை ஏற்றது.

சில வருடங்களுக்கு முன்னர், இந்தியாவை சாக்கடை என்றும், கங்கை நதியை மலக்குழி என்று ஆஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர் ஒருவர் வர்ணித்ததுக்கு, நம் அரசியல்வாதிகளும் மக்களும் பொங்கி எழுந்தனர்.

ஆனால் இதற்கு பின்னரும் மாசுவை தடுக்க எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முற்படவில்லை, மக்களுக்கு தானாகவும் எந்த விழிப்புணர்வும் இல்லை.

பாதி எரிந்த பிணங்கள், அழுகிய அனாதைப் பிணங்கள், மலங்கள், பிளாஸ்டிக் குப்பை கூளங்கள், அழுகிய பூக்கள், பூ மாலைகள் என நாம் சற்றும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் அசுத்தங்கள் உள்ளன. கங்கை நதி ஓரத்தில் மொத்தம் 90-க்கும் மேற்பட்ட சுடுகாடுகள் உள்ளன. பிணத்தின் உறவினர்கள் எரியூட்டிய உடன் வெட்டியானிடம் பணம் அதிகம் தந்து, பாதி வேகும் போதே நதியில் தள்ளிவிட சொல்லுகின்றனர். அப்போது தான் நேராக சொர்க்கமாம். இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?
[vuukle-powerbar-top]

Recent Post