Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ரோமானியர்களின் தீராத காதல் வேட்கை: ஏராளமான பாலியல் கலைப்பொருட்கள் பிரிட்டனில் கண்டுபிடிப்பு!

Creative Commons License
ரோமானியர்களின் பாலியல் வேட்கை- கட்டுரை is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 இந்தியா License.
Permissions beyond the scope of this license may be available at rajtyagi@newsalai.com.
தீராத விளையாட்டுப் பிள்ளைகள்:
ரோமானியர்களின் கலவி வேட்கை! 
உலோக கண்டுபிடிப்பானைக் கொண்டு பல்வேறு ரோமானிய கலைப்பொருட்கள் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரோமானிய பேரரசரின் ஒரு மார்பளவு சிலை உட்பட கலைப்பொருட்கள் பலவற்றை கண்டுபிடித்துள்ளனர். தாவும் டால்பின், ஆண்குறி வடிவ கலைப்பொருள் மற்றும் விலங்கின் எலும்பு போன்றவை, வெள்ளி மற்றும் தங்கத்தினாலான மார்பு கவர்ச்சியாக உள்ள பெண்ணின் சிலை ஆகியவை கிடைத்துள்ளன. பெண்ணின் சிலையானது, அவளின் காதலனுடன் கலவி புரிவது போல் வடிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் பரவலான இடங்களில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள், 1600 முதல் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும். அந்த காலகட்டத்தில் பிரிட்டனை ரோமானியர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். 

கிடைத்துள்ள கலைப் பொருட்களில் பெருவாரியானவை பாலுணர்வைத் தூண்டும் வகையில் உள்ளன. அழகுபடுத்தி செதுக்கப்பட்ட, பெண்கள் அணியும் மோதிரம் ஒன்று கிடைத்துள்ளது. மோதிரத்தின் மையத்தில் ஒரு சிறிய கரு முட்டை மற்றும் கருப்பை போன்ற வடிவம் உள்ளது. எனவே, இந்த மோதிரம் திருமணத்தின் போது மணமகனால் அணிவிக்கப்பட்டு, புது மணப்பெண் உடலுறவை எந்நேரமும் நினைத்துக் கொண்டிருக்கவே இது போன்ற மோதிரம் அணிவிக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு அதிகாரி கூறினார். "அது ஒரு திருமண நிச்சயதார்த்தம் மோதிரம்; இது ஒரு மிகச் சிறிய ஆனால் மிகவும் கவர்ச்சிகரமான துண்டு" என்றும் அவர் வேடிக்கையாக சொன்னார். 

வெவ்வேறு நிலைகளில் உடலுறவு கொள்வது போல் வடிவமைக்கப்பட்ட சிலைகள் ரோமானியர்களின் பாலியல் உணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. " "ரோமானிய வீட்டில் இருந்த காமவேட்கையை வெளியில் கொண்டு வந்திருக்கும் அசாதாரணமான ஆய்வு" என்று ஜான் பியர்ஸ் (லண்டன் கிங்ஸ் கல்லூரி தொல்லியல் துறை விரிவுரையாளர்) கூறியுள்ளார்.

-ராஜ்தியாகி
[vuukle-powerbar-top]

Recent Post