Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மகாத்மா காந்தியின் பிறந்த நாளும்; கூடங்குளம் வன்முறைகளும்: போராட்டம் உணர்த்தும் உண்மைகள்!

தலைகள் புதையும் நேரமிது: கூடங்குளம் துயரம்!
இரு கால்களையும் இழந்து தவிக்கும் லீனா என்ற கூடங்குளத்தை சேர்ந்த பெண்ணிடம் காவல் துறையினர் கேட்ட கேள்விகளைக் கேட்டால், கணினிக்கும் காது கூசும். அந்த அளவிற்கு கேவலங்கெட்ட முறையில் நடந்து கொண்டிருக்கிறது தமிழக காவல் துறை.

கூடன்குளத்தில் நடந்தது என்ன?

கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி காவல் துறை நடத்திய தடியடிக்குப் பின் காணாமற் போன தன் குழந்தையை தேடிச் சென்றிருக்கிறார் லீனா என்ற பெண். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் லீனாவின் உடலைத் தீண்டி, தவறாக நடக்க முயற்சித்திருக்கிறார். 'நான் குழந்தையைத் தேடித்தான் வந்தேன்; என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள்' என்று லீனா கெஞ்ச, அந்த மிருகக் கா(கே)வலர் கேட்ட குரூரமான கேள்வி, 'உதயக்குமார் கூப்பிட்டாதான் போவியா; நாங்க கூப்பிட்டா வர மாட்டியா?'.

இன்று வரை லீனாவால், அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை. லீனாவைப் போல் பல பெண்கள் இந்த கொடுமைக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதை நம்ப வியப்பாகத்தான் உள்ளது. ஆனால், அதுவே உண்மை.

அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் யாரையும், அதிகாரம் என்கிற வஜ்ராயுதத்தால் அடக்கி விடலாம் என்றே மத்திய மாநில அரசுகள் எண்ணுகின்றன. கூடங்குளம் மக்கள், தெளிவாக உணர்ந்தே அணு உலையை எதிர்க்கிறார்கள். ஜப்பானில் ஏற்பட்டது போல, விபத்து ஏதேனும் கூடங்குளத்தில் ஏற்பட்டால் அதை தாங்கக் கூடிய சக்தியோ, இல்லை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையோ குறைக்கவோ இந்திய அரசால் முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. 

'அணு உலை இயங்கினால் கூட பரவாயில்லை; எங்களுக்கு அணு உலை வெடிக்கும் அவசர காலத்தில் எப்படி பாதுகாப்பதாக இருப்பது என்றாவது பயிற்சி தாருங்கள்' என்று கூடங்குள மக்கள் கோரிக்கை விடுத்த காலங்களும் உண்டு. கோரிக்கைகளுக்கு தீர்க்கமான முறையில் பதில் தரக் கூட வக்கில்லாத மத்திய மாநில அரசுகள். மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத அரசு இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?

"காவல்துறையினர் உங்களை தாக்கினாலும், அவர்களை திருப்பி தாக்காதீர்கள்" என கூடங்குள போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களிடம், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வேண்டுகோள் விடுத்தது கடந்த வார செய்தி. அவர் மேலும் கூறும்போது, "இந்தியாவில் அற வழியில் போராடிய காந்தியின் அகிம்சை போராட்டம் வெற்றியடைந்தது போல, நமது போராட்டமும் வெற்றியடையும்" எனவும் கூறிய உதயகுமார் முழுக்க, முழுக்க காந்திய வழியில் போராடி வரும் மனிதர். அவரின் போராட்டத்திற்கு பின்னால் நிற்கும் பெண்களுக்குத்தான் இந்த கொடிய அவலம் நேர்ந்துள்ளது. 

காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாட நமக்கு என்ன தகுதி வந்துவிட்டது? இந்தியா காந்தியம் செழித்த நாடு என மார் தட்டிக் கொள்வோரே, உங்கள் கருத்துகளை மறு பரிசீலனை செய்து கொள்ளுங்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post