Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வராலாறு காணாத வகையில் கடும் புயல்: முடங்கியது அமெரிக்கா- 12 பேர் பலி!

New York City Could Get the Worst of Sandy’s Wrath!
அட்லாண்டிக் கடலோர பகுதிகளில் மையம்கொண்ட சாண்டி புயல் நியூயார்க் மற்றும் நியூஜெர்சியை வரலாறு காணாத அளவிற்கு பாதித்துள்ளது. இது வரை 12 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப்பகுதியை தாக்கியுள்ள சாண்டி புயலால்அங்கு பல மாகாணங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. 120 கி.மீ. வேகத்தில் சூறாவளியுடன் மழையும் பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதியில் உயர்ந்த கட்டிடங்கள், வீடுகள் மூழ்கியுள்ளன.

கரீபியன் கடலில் உருவான சாண்டி புயல், ஜமைக்கா, கியூபாவை போன்றபகுதிகளை நாசம் செய்த பின்னர் அமெரிக்காவை இந்த சாண்டி புயல், 1,600 கி.மீ. பரப்பளவில் தா‌க்‌கியுள்ளது.

நியூயார்க், நியுஜெர்சி, பால்டிமோர், வடக்கு கரோலினா முதல்கனெக்டிகட் வரையில் அனைத்து நகரங்களும் இந்த சூறாவளியால் பெரும் சேதமடைந்துள்ளது. 12000த்திற்க்கும் மேற்பட்ட விமான சேவைகள்நிறுத்தப்பட்டுள்ளன.

11 அடி உயரத்துக்கு கடலில் அலைகள் எழும்பி ஊருக்குல் கடல் நீர் புகுந்துள்ளதால் மன்ஹாட்டன் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் பெரிதும் சேதமடைந்துள்ளன.

அதிபர் பராக் ஒபாமா நேற்று மக்களுக்கு முன்எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் பேசுகையில், ‘இந்த புயலை மக்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது, இது மிகப்பெரிய, ஆபத்தான புயல்’ என்று கூறினார்.


[vuukle-powerbar-top]

Recent Post