Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மும்பையை தொடர்ந்து புனேயிலும் டெங்கு பரவுகிறது!

டெங்கு காய்ச்சல் அறிகுறி!
மும்பையில் கடந்த வாரத்தில் டெங்கு பரவியது. இதனால் பலர் பீதி அடைந்து மருத்துவமனையில் சேர்ந்தனர். தற்போது புனே நகரிலும் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இது பற்றி, சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

புனே நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. பறவை காய்ச்சல் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்குள், மற்றொரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆஸ்பத்திரி ரெக்கார்டுகளில் பதிவாகி உள்ளன. கொசுக்களால் டெங்கு காய்ச்சல் வருகிறது. எனவே, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 

டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதார துறை அதிகாரிகள் மேறகொண்ட நடவடிக்கைகள் பற்றிய விரிவான அறிக்கை, புனே மாநகர சபையில் நவம்பர் 5-ந் தேதி தாக்கல் செய்யப்படும். வீடுகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறும், குடிநீரை சுத்தமாக பராமரிக்குமாறும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post