Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சுரங்க ஊழலில் ரூ.500 கோடி வாங்கினேனா? திக் விஜய் சிங் மீது நிதின் கட்கரி அவதூறு வழக்கு!

நிதின் கட்கரி ஆதாயம் பெற்றதாக  சொல்கிறார் திக் விஜய் சிங்!
நிலக்கரி சுரங்க முறைகேட்டில் பா.ஜ., தலைவர் நிதின் கட்கரி, ரூ.500 கோடி ஆதாயம் அடைந்ததாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் பொது செயலாளர் திக் விஜய் சிங் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக மத்திய தலைமை கணக்கு அதிகாரி கடந்த மாதம் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதை தொடர்ந்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய உத்தரவின்படி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்ற 10 தனியார் நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. 

இந்நிலையில் மகாராஷ்டிராவில் பா.ஜ., எம்பி அஜய் சான்செட்டிக்கு சொந்தமான நிறுவனத்துக்கும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த வகையில் அந்த நிறுவனத்துக்கு ரூ.500 கோடி லாபம் கிடைத்திருப்பதாகவும் காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார். இந்த நிறுவனத்தில் பாஜ தலைவர் நிதின் கட்கரி பங்குதாரராக இருப்பதாகவும், நிதின் கட்கரி பரிந்துரையின் பேரில் அந்த நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதாகவும் திக் விஜய் சிங் கூறினார். இதற்கு நிதின் கட்கரி கடும் எதிர்ப்பு தெரிவித்து திக் விஜய் சிங் மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post